புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பறவைக் காவடி எடுத்த பெண் பக்தர்கள்
தாக்குதலுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
ஒரு குழந்தையின் தாய்
தாக்குதலில் பலியானவர் 21 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஆவார். அவர் வைக்கல, வென்னப்புவ, தம்பரவில பகுதியைச் சேர்ந்தவர்.
குற்றத்தைச் செய்த 29 வயதுடைய சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரும் அருகிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாகவும், வைக்கல பகுதியில் உள்ள ஒரு ஓடு தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.