குப்பை லாரியில் கழுத்துடன் கால்கள் கட்டப்பட்டு இளம் பெண்ணின் சடலம்!!

  இந்தியாவின் பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகையில்,


கர்நாடக மாநிலம், சன்னம்மனகெரே ஸ்கேட்டிங் திடல் அருகே உள்ள ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) குப்பை லாரியின் பின்புற லிப்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


Tamil lk News
 

சடலமாக மீட்கப்பட்ட பெண் சுமார் 25-30 வயதுடையவர் என்று நம்பப்படுகிறது. எனினும் பெண்ணின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,


 “நேற்று இரவு, குப்பை சேகரிக்கும் லாரிக்குள் ஒரு சடலம் இருப்பதைக் கண்டோம். அதிகாலை 1 முதல் 3 மணிக்குள், யாரோ ஒரு பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்தி, பையில் அடைத்து லாரியில் வீசி இருக்கலாம் என தெரிவித்தார்.



 கழுத்துடன் அவரது கால்கள் கட்டப்பட்டு சடலம் ஒரு பையில் அடைக்கப்பட்டு, குப்பை லாரியில் வீசப்பட்டது. பிபிஎம்பி குப்பை லாரி ஓட்டுனர் அதைக் கவனித்து எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்.


News Thumbnail
வவுனியாவில் பற்றி எரிந்த வீடு...!


இதன் அடிப்படையில், நாங்கள் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார். உயிரிழந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.



 கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவு 12:30 மணி முதல் 12:40 மணி வரை ஆகிய இடைப்பட்ட நேரத்தில் சடலத்தை லாரியில் வீச வந்துள்ளனர்.



 விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்