வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு: பொதுமக்கள் அவதி

Tamil lk news

  வவுனியாவில்(Vavuniya) அரச கால்நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.



 அத்துடன், குறித்த யாப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



 அதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil lk News


இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் கால்நடைகளிற்கான மருத்துவ தேவைக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.


News Thumbnail
யாழில் கரையொதுங்கிய திமிங்கிலத்தால் பரபரப்பு!!




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்