ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் நிறுதப்படுகிறதா? சபையில் பிரதமர் வெளியிட்ட தகவல்

  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


இன்று (04) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது தேர்வு முறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.



பல ஆண்டுகளாக புலமைப்பரிசில் மாணவர்களுக்கு ஏற்படுத்திய அழுத்தத்தைக் குறைக்க அவர்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் புலமைப்பரிசில் பரீட்சையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நம்புவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்