ஏர் இந்தியா விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் ஐவர் மரணம்

Tamil lk News

  இந்தியா குஜராத் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் மோதியதில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


அத்துடன் இதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



 இன்று பிற்பகல் இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.



242 பேருடன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேர்த்திலேயே விபத்துக்குள்ளானமை இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்