பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து...!

Tamil lk News

  நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்து இன்று பிற்பகல் நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் இராகலை புரூக்சைட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


tamil lk News

மரத்தில் மோதி

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும்,



இதில் ஒரு சிறுவர், ஒரு பெண் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் அடங்குவதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்