பாடசாலையில் வழங்கப்பட்ட கோழி கறி; 22 மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

Tamil lk News

  

Tamil lk News

மட்டக்களப்பு - கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் கல்விகற்கும் 22 மாணவர்கள்  உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.


சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையில் சோறுடன் கோழி இறைச்சி கறி தயாரித்து இன்று பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.



இதனை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 


மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


News Thumbnail
இலங்கையில் நடந்த கொடூரம்...! காருக்குள் வைத்து வர்த்தகரை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்


இதனையடுத்து குறித்த உணவை பரிசோதனை செய்ததில், வழங்கப்பட்ட கோழி இறைச்சி பனிக்கட்டியில் இருந்து எடுத்து தயாரிக்கப்பட்டதாக பொது சுகாதர பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




இச்சம்பவத்தையடுத்து பாடசாலையின் முன் பெற்றோர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்