வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!!

  

Tamil lk News

வவுனியாவில்(Vavuniya) பட்டப்பகலில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .


வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் வீடு புகுந்து சிலிண்டர், லப்டொப், ரப், கைத்தொலைபேசி, தொலைபேசி, தொலைகாட்சி போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.


 அதில் தொலைபேசி, லப்டொப் என்பன தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் இருந்த போது அப்பகுதியூடாக சென்றவர்கள் அதனை எடுத்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்தனர்.



 இதனையடுத்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.



 இதனையடுத்து, 32, 28, 21 வயதுடைய மூன்று பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


 மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றின் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்