கொழும்பில் கோர சம்பவம்; தம்பதியினர் உயிரிழப்பு

  கொழும்பு(Colombo) - தெஹிவளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tamil lk News


தெஹிவளை ரயில் ல் மார்க்கத்தில் நடந்து சென்ற தம்பதியர் மீது கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



உயிரிழந்தவர்கள் பதுளை, பதுலுபிட்டியவில் வசிக்கும் 58 மற்றும் 59 வயதுடைய தம்பதியர் ஆவர்.



சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்