இலங்கையில் வெப்பமான வானிலை: நீர்ச்சத்து குறைபாடு, தோல் நோய்கள் குறித்து எச்சரிக்கை !

 

tamil lk  News

 

இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.


 


இதைத் தடுக்க, பொதுமக்கள் போதுமான தண்ணீர் மற்றும் இயற்கையான நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.


 


மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "அவதானம்" மற்றும் "எச்சரிக்கை" மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்