பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

  

Tamil lk News


பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.




இந்த விபத்து இன்று புதன்கிழமை  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.



காயமடைந்த 16 பாடசாலை மாணவர்களும் சிகிச்சைக்காக பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த விபத்து தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்