கொழும்பு - தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரொருவரை பிரதேசவாசிகள் சிலர் இணைந்து பிடித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பிரதேசவாசிகள் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்தியுள்ளதால் அவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.