தமிழர்களின் நடைபாதை கடைகள் சில அகற்றம் - வவுனியாவில்....!

Tamil lk News


  வவுனியா (Vavuniya) யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் இருந்த சில நடைபாதை வியாபார நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.


மாநகர சபையினால் குறித்த கடைகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.



அக்கடைகளில் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.



தமிழ் மக்களுடைய கடைகள்

அண்மைக்காலமாக மாநகர சபையினால் நடைபாதை கடைகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் இருந்த தமிழ் மக்களுடைய கடைகள் இன்று  அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்