வவுனியாவில் - தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி கை எழுத்துப் போராட்டம்!!

  

Tamil lk News

அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரி சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கை எழுத்துப் போராட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.


குறித்த போராட்டம் இன்று (12) வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.



 இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவோம் போன்ற கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

Tamil lk News


 குறித்த போராட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்