ரஷ்யாவை தாக்கிய சுனாமி; தொடர்ந்து பல நாடுகளுக்கு எச்சரிக்கை!!

  

Tamil lk News

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. 


ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில்,


19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்தநிலையில் ரஸ்யாவின் யெலிசோவோ மாவட்டத்தில் 3-4 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


News Thumbnail


 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது, 



அந்நாட்டில் 1 மீட்டர் வரை அலைகள் உயரக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. 



அத்துடன் ஹவாய் தீவுகள் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்