செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளில், இன்று (06) புதிதாக 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, மூன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. நேற்று செருப்புடன் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு மற்றும் இடுப்பில் தாயத்துடன் கூடிய மற்றொரு எலும்புக்கூடு ஆகியவை அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அடையாளம்
செருப்பு, தாயம், காசு உள்ளிட்ட சான்று பொருட்கள் மீட்கப்பட்டு நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 16 நாட்களில் 68 எலும்புக்கூட்டு தொகுதிகளும், மொத்தம் 41 நாட்களில் 133 தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 147 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
"தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல-01" மற்றும் "இல-02" என நீதிமன்றால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று 32வது நாளாக பணிகள் நடைபெற்றன.
இன்றைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஓகஸ்ட் 14 அன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. ஸ்கான் மற்றும் மண் பரிசோதனை அறிக்கைகள் அன்று சமர்ப்பிக்கப்படும். அடுத்த கட்ட அகழ்வு பணிகள் ஓகஸ்ட் 21 முதல் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.