பாகிஸ்தானின் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றமையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 279 பேர் இறந்ததாக முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றமையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகிற 21ஆம் திகதி வரை கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.