திடீர் தீ விபத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில்!

  

Tamil lk News

மொனராகலை - வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ளது.



தீ விபத்தின் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்