ரணிலுக்கு 24 மணித்தியாலங்கள் ரணிலுக்கு தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு!!

  

Tamil lk News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற் கொண்டு, முதல் 24 மணித்தியாலங்கள் அவரை வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பில் வைப்பது பொருத்தமானது என வைத்திய நிபுணர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.




இதனை தொடர்ந்து அவர், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்