ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

 

Tamil lk News

 மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி, நேற்று இரவு சென்ற கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 



களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்