கொழும்பு - புறக்கோட்டைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சற்றுமுன்னர் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புறக்கோட்டை 3ஆவது குறுக்குத் தெருவின் கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையமென்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தையடுத்து தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு தீயணைப்புப் பிரிவினர் விரைந்தனர்
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது.