தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் ஆவார். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா படப்பிடிப்புதளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றவர் அவர் உடல் நிலை மோசமானது.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46 ஆகும். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்
ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இறுதி சடங்குகள் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது