கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட யாழ் - நபர் - விசாரணையில் கைக்குண்டும் வாள்களும் மீட்பு

  

Tamil lk News

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கடடுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்துவந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.




அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இருந்து கை குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.




விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்