பிறந்த தினத்தில் உயிரிழந்த இளைஞன்!!

  

Tamil lk News

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். 


இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் (21-09-2025) இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகள், 


தனது வீட்டிலிருந்து நுவரெலியா நகருக்குள் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், குறித்த சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் செல்ல முற்பட்டபோது, இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாகச் சென்ற லொறியில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

வைத்தியசாலையில்

இளைஞர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார் என்று நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



இந்த விபத்தில் உயிரிழந்தவர் நுவரெலியாவின் ஹாவா எலியா பகுதியைச் சேர்ந்த மனித் அபுர்வ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர், 


மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.



விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21வது பிறந்தநாள் இன்றைய தினம் அகும். 


மேலும் உயிரிழந்த குறித்த இளைஞன் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர மொழியை சேர்ந்த பிராந்திய செய்தியாளர் சம்பத் ஜெயலாலின் ஒரே மகன் என தெரியவந்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்