அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்து!!

 

Tamil lk News

 கொழும்பில்(Colombo) இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்  சென்ற அதிசொகுசு பேருந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


  வேகக் கட்டுப்பாட்டினை... 

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியின்  ஓரமாக உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்துவதற்காக வீதி ஓரமாக நிறுத்த முற்பட்டபோது பேருந்து வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 


இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டி மற்றும், அதி சொகுசு பேருந்தின் முன் பகுதி பாரிய சேதத்துக்குள்ளானதுடன் லொறியின் பின் பகுதியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

Tamil LK News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்