தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்திவுக்கு பின்னால் பயணித்த வேன் இன்று (16) அதிகாலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் மூன்று குழந்தைகள் களுபோவில வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய தவலமவில் பகுதியைச் சேர்ந்த புஷ்பகுமாரி சந்தமாலி என்ற பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த குறித்த பெண் வணிகத் துறையில் பணிபுரிந்து வருபவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.
சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு அழைத்து வருவதற்காக தவலமயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் அதிவேகமும், உறக்கமும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.