பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல்
மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .