இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து; மூவர் பலி; நால்வர் காயம்!!

  

Tamil lk News

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 


இந்த விபத்து தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகொட பகுதியில் இன்று அதிகாலை 04.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் வேனில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.



 விபத்தில் மேலும், நால்வர்  காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள்  சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அதேநேரம் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்