அத்துரலிய ரத்தன தேரரருக்கு பிணை!

 

Tamil lk News

 

அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதி வழங்கி  நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 




இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரத்தின தேரரை தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 




2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




குறித்த குற்றச்சாட்டுக்காக தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்