இலங்கை அரச க்ளெட் சேவையில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் ஏற்பட்டிருந்த இடையூறுகள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பொதுமக்கள் எந்தவித இடையூறுகளும் இன்றி அவற்றைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் தரவு பாதுகாப்புக்கு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.



