முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்துள்ள சீன வர்த்தகர்கள் குழு

 

Tamil lk News

 சீன வர்த்தகர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளது.


குறித்த சந்திப்பானது,நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.


 இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது நலம் தொடர்பில் விசாரித்துள்ளனர்.



 கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய தங்காலையில் குடியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதும் என்று தெரிவிக்கப்படுகிறது.



தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு,வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் வழியில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்