திருகோணமலைக்கு ஜனாதிபதி விஜயம் - கிண்ணியா விவசாயிகள் கவனயீர்ப்பு!!

Tamil lk News


  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திருகோணமலையில் உள்ள சீனக் குடா விமான நிலையத்தில் இன்று (18) நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 




திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக 32 ஆவது நாளாகவும் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முத்து நகர் விவசாயிகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது விவசாய நிலங்களுக்கான தீர்வை முன்வைக்க கோரி கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 




மக்கள் போராட்ட முண்ணனி, அகில இலங்கை விவசாய சம்மேளனம் ஆகியன இணைந்தும் விசேடமாக குறித்த கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்