காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இறந்த 28 பேரின் உடலங்களையும் விடுவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 1,718 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக இஸ்ரேல் வந்தடைந்துள்ளார்.
அமெரிக்க ஜனாிதிபதி பின்னர் காசா அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள எகிப்துக்குச் செல்வார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.