வவுனியாவில் - உலக வதிவிட தினத்தினை முன்னிட்டு வீடு கையளிப்பு!

  

Tamil lk News

நாடு பூராவும் உலக வதிவிட தினத்தின் 39வது ஆண்டினை முன்னிட்டு என்னுடைய இடமும் அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளில் வீடு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



அந்த வகையிலே வவுனியா பேயாடிகூழாஙகுளம் பகுதியில், ம.சிவகுமார் என்ற பயணாளிக்கு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்கவினால இன்றையதினம் வீடு கையளிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளிற்கான காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கி வைத்திருந்தார்.



இதேவேளை வவுனியாவில் உள்ள நான்கு பிரதேச சபை பிரிவுகளிலும் 20 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 62 பேருக்கு உறுதி பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ந.கமலதாசன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட அதிகாரி தேவிகா விஜயரத்தின மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்