நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

  

Tamil lk News

முல்லைத்தீவு - நெடுங்கேணி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்தானது இன்று (5) மாலை இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தின்போது 17ஆம் கட்டை நெடுங்கேணியினை சேர்ந்த 69 அகவையுடைய கறுப்பையா செல்வக்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.




 சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உந்துருளியில் பயணித்த கணவன், மனைவி இருவரும் வீதியில் நின்ற கால்நடையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.




 இதன்போது, கணவன் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதானா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்