காலி, படபொல பொலிஸ் பிரிவின் கஹட்டபிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தனது மகனை கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளார்.
28 வயதுடைய தாய் ஒருவர் தனது மூன்றரை வயது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கொலை மற்றும் உயிர் மாய்ப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பட்டபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



