வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரன் போர்

Tamil lk News


  தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக உலகளாவிய இந்து மக்களினால் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்த சஷ்டி ஆகும்.


இக்கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று வவுனியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரன்போர் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.



வவுனியாவில் நெளுக்குளம் ஶ்ரீ முருகன் ஆலயம், கந்தசாமி கோவில், தாண்டிக்குளம் முருகன் கோவில், உட்பட பல்வேறு ஆலயங்களில் சூரன்போர் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.



இதேவேளை நாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில் நேற்றைய தினம் சூரன்போர் வெகு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்