வீடொன்றில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தம்பதியின் சடலங்கள் மீட்பு!!

  

Tamil lk News

ஹுங்கம, வாடிகல பிரதேசத்தில் உள்ள ஒரு வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


 கூரிய ஆயுதங்களால் வெட்டி படு கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


 ஹுங்கம, ரன்ன, வாடிகல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.



 முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 28 வயதுடைய ஒருவரும் அவரது இரகசிய மனைவியும் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.தெரிவித்தனர்.



 குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார். அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 



கொலையை யார் செய்தார்கள், எதற்காக இந்த கொலையை செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. 


 மேலும் இன்று உடல்களின் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்