மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

  

Tamil lk News

மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன், தனது நான்கு வயது குழந்தையை கூரையின் மேல் வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


வெல்லம்பிட்டி லிசன்பொல பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.


கொல்லப்பட்டடவர் 29 வயதுடைய துஷாரி என்ற பெண் ஆவார்.


 பெண்ணின் கணவர் வீட்டின் கூரையில் ஏறி, கூரையின் தகரத்தை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, அவரது தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




 குழந்தை தீயில் பாதிக்கப்படும் என நினைத்து, சந்தேக நபர் குழந்தையை கூரையின் மேல் வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். கணவன்,மனைவிக்கிடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.




இதன் காரணமாக, சந்தேக நபருக்கு எதிராக பெண் பொலிஸில் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளார். சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்பதால் விவாகரத்து வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




சம்பவத்திற்கு முன்னர் சந்தேக நபர் வீட்டின் நீர் விநியோகத்தை துண்டித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இதுதொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்