அடுத்தடுத்து உருவாகவுள்ள 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி....!

Tamil lk News


  இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. 

 

இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என தெரிவிக்கப்படுகிறது. 

 

இதேவேளை பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு தாக்கிய மிக மோசமான 'கல்மேகி' (Kalmaegi) சூறாவளியினால் 114 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். 

 


இந்தநிலையில் மற்றொரு சூறாவளியான ஃபோங்-வோங், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


இந்த புயல் தற்போது தென்கிழக்கு திசையில் வேகமாக நகர்ந்து வருகிறது. எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்