திடீரென இடிந்து விழுந்த 758 மீட்டர் நீளமுள்ள பாலம்!!

  

Tamil lk news


தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.




 மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.




அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. 




பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்