யாழில் - போதை மாத்திரைகளுடன் சிக்கிய மூவர்

  

Tamil lk News

யாழ்ப்பாணம்(Jaffna) - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை பகுதியில் நீண்ட நாட்களாக போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் 


சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய மீசாலை பகுதியை சேர்ந்த ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரிடம் இருந்து 300 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இதேவேளை  சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து 8 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.



சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்