பறக்கும் கார்கள் உற்பத்தியை ஆரம்பித்துள்ள சீனா

 

Tamil lk News

 அடுத்த தலைமுறைக்குரியவகையில்  பறக்கும் கார்கள் உற்பத்திக்கான  சோதனை முறையை  சீன நிறுவனம்  ஆரம்பித்துள்ளது. 


 


அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, விரைவில் பறக்கும் கார்களை உற்பத்தி செய்யவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக, பறக்கும் கார்கள் உற்பத்தியை சீன நிறுவனம் தொடங்கியிருக்கிறது.


 


தெற்கு சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் 1.20 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவில் உருவாக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையில் முதல் பறக்கும் கார் தயாரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


முதற்கட்டமாக ஆண்டுக்கு 5,000 பறக்கும் கார்களை இந்த தொழிற்சாலை தயாரிக்கும் வல்லமை பெற்ற நிலையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது ஆண்டுக்கு 10 ஆயிரம் பறக்கும் கார்களைத் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 

இதுவரை உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிலேயே, மிகப்பெரிய அளவில் திறன் பெற்ற தொழிற்சாலையாக இது அமைந்திருப்பதாகவும், அதன் முழு செயல்திறனும் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு பறக்கும் கார் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்