சைப்ரஸின் சில பகுதிகளில் 5.2 ரிச்டர் நிலநடுக்கம்!

  

Tamil lk News

மத்திய கிழக்கு நாடான சைப்ரஸின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கமானது இன்று(12)  5.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆனால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



 இந்நிலையில் லெபனானிலும் நிலநடுக்க உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.



 நில அதிர்வு இடம்பெறும் பகுதியில் சைப்ரஸ் அமைந்து இருந்தாலும், அங்கு பதிவாகும் நிலநடுக்கங்கள் அரிதாகவே சேதத்தை ஏற்படுத்துகின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்