வவுனியா பல்கலை முதல் ஆண்டு மாணவன் திடீர் மரணம்; தீவிரமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார்

Tamil lk News


  வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவன் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணவனே மேற்படி உயிரழந்துள்ளார்



கடந்த 31 ஆம் திகதி இரவு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் பல்கலை விடுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் மாணவனை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டத்தாக தெரிவித்துள்ளனர்



உயிரிழந்த மாணவனின்  உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.



மேலும் குறித்த திடீர் மரணத்திற்கான  காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்