கிளிநொச்சியில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு

  

Tamil lk news

கிளிநொச்சி - பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் இருந்து 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 


நேற்றையதினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 


இதன்போத குறித்த கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. 



இச் சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.+

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்