இலங்கையில் இன்று காருடன் வைரலான பெண்

  போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்றபோது, தான் DIG யின் தங்கை எனக்கூறி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மூத்த டிஐஜி ஒருவரின் சகோதரி என்று கூறி பொலிஸாரின் கடமையைத் தடுத்த பெண் தொடர்பான சம்பவம் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகடை-உடுகம்பொல சாலையில் நேற்று இடம்பெற்றது.

Tamil lk News


போக்குவரத்து விதிமீறலுக்காக காரை ஓட்டிச் சென்ற பெண், காரை நிறுத்துமாறு சைகை செய்தபோது, ​​அவர் தொடர்ந்து காரை செலுத்திச் சென்றார்.


பின்னர், போக்குவரத்து அதிகாரிகள் காரை துரத்திச் சென்று உடுகம்பொல பகுதியில் நிறுத்தி ஆய்வு செய்தபோது தான் டிஐஐ ஜியின் சகோதரி என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு அந்த இடத்திலிருந்து பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் காரை செலுத்திச் சென்றார்.



இலங்கை பொலிஸ்பிரிவின் மூத்த டிஐஜி ஒருவரின் சகோதரி என்று சந்தேகிக்கப்படும் பெண் அளித்த வாக்குமூலம் முற்றிலும் தவறானது. அத்தகைய உறவு எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.



இந்நிலையில் அந்த பெண் நடந்து கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.



அதனையடுத்து ஆபத்தான வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், காவல்துறை சமிக்ஞைகளை பொருட்படுத்தாமல் வாகனம் ஓட்டுதல், குற்றவியல் பலம் மற்றும் வேறொரு நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பெண் மீது பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது.


சர்ச்சைக்குரிய குறித்த பெண்ணை இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் அவரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்