தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

  ஹெட ஓயாவை அண்டிய தாழ்வான பகுதிகளில் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று (26) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. 


இம்மழைவீழ்ச்சி காரணமாக, தற்போது ஹெட ஓயா ஆற்றுப் படுக்கையின் மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ மற்றும் அம்பாறை மாவட்டத்தின் லகுகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஹெட ஓயாவை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Tamil lk News


கும்பக்கன் ஓயா ஆற்றுப் படுக்கையை அண்டிய தாழ்வான பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (26) பிற்பகல் 4.00 மணிக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. 


இதேவேளை  மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 



அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வீதமும், நான்கு வான் கதவுகள் ஆறு அங்குல வீதமும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரவீந்திர குமார தெரிவித்தார். 


நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணிக்க கங்கையின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதால், கதிர்காமத்திற்கு வரும் பக்தர்கள் அவதானத்துடன் இருக்குமாறு மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. 



இதன் காரணமாக மாணிக்க கங்கையின் இரு கரையோரங்களிலும் உள்ள மக்கள் மற்றும் கதிர்காமம், செல்லக்கதிர்காமம் புனித பூமிகளில் உள்ள பக்தர்கள் மாணிக்க கங்கையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.


 இதேவேளை, வெள்ளவாய அலிகொட்ட ஆர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெல்லவாய - வேவல்கதுர வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 


வெல்லவாய பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் அலிகொட்ட ஆர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. 


நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்ததால் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, வெல்லவாய - வேவல்கதுர வீதி நீரில் மூழ்கியுள்ளது.


கும்பக்கன் ஓயா ஆற்றுப் படுக்கையை அண்டிய பிரதேசங்களில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறு வெள்ள அபாய நிலை காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



கடும் மழை காரணமாக மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவின் நக்கல, கும்பக்கன, மாதுறுகெட்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும், புத்தல பிரதேச செயலாளர் பிரிவின் ஒக்கம்பிட்டிய மற்றும் காமினிபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் உட்பட்ட கும்பக்கன் ஓயாவை அண்டிய தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாயம் காணப்படுகின்றது. 


எனவே அப்பிரதேசங்களில் கும்பக்கன் ஓயாவிற்கு அண்மையில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பிரதேசங்களின் ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதேவேளை பதுளை - கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும், பெரகலைக்கும் இடையிலான பகுதியில் இன்று (26) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டது. 


இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதனை அடுத்து ஹப்புத்தளை நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து குறித்த வீதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டன 


இந்நிலையில் பதுளை - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து ஒரு மருங்கில் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அத்துடன் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்