வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான தகவல்

 

Tamil lk News

 சமூக பாதுகாப்பு வரியால் வாகனங்களின் விலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உதாரணமாக, சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் சுமார்  250,000 ரூபா அல்லது இரண்டரை (2.5) சதவீதம் அதிகரிக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இதேவேளை, வாகனங்கள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுமாயின் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு தாக்கம் ஏற்படக் கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார்.



வாகன இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கலாம் எனவும், அதனால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுவதுடன், நாட்டுக்கு இவ்வாறான நிலைமை ஆபத்தானதாகும் என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்