யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்

Tamil lk News


  யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.


ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


இதன்படி, தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.



இதனையடுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, வீர மரணம் கண்ட மாவீரர்களை கண்ணீரோடு மக்கள் அஞ்சலித்து வருகின்றனர்.



சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்